மதிப்பிற்குரியவருக்கு அன்பான வணக்கங்கள்,
இன்று 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி அளவில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், இரெட்டிப்பட்டி, கந்தபுரி கிராமத்தில் உள்ள கடவுள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் மக்கள் பாதை இயக்கம் இணைந்து நடத்திய இரத்ததான விழிப்புணர்வு பேரணி சிறப்புற நடைபெற்றது. தலைமை : மரு.. கண்ணப்பன்,M.S(ortho). அவர்கள். நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி முன்னிலை : மரு. M. திருமொழி கண்ணப்பன் M.B.B.S., D.G.O., அவர்கள் சிறப்பு அழைப்பாளர் : திருமதி. V.ரோஜா அவர்கள் உதவி அரசு வழக்கறிஞர், சேலம். கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தவர் : மரு. M. மல்லிகா குழந்தைவேல் M.B.B.S., அவர்கள். நாமக்கல் தங்கம் மருத்துவமனை. இந்த பேரணியானது நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை, பரமத்தி சாலை, உழவர் சந்தை, மணிக்கூண்டு, பேருந்து நிலையம், மோகனூர் சாலை வழியாக மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை (தெற்கு) வந்தடைந்தது. இந்த பேரணியில் கடவுள் அறக்கட்டளை, மக்கள் பாதை அமைப்பு, அவயவி இரத்ததான குழு, தோள் கொடுப்போம் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள், பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் தொடர்பான பதாகைகளை ஏந்தியும், இரத்ததான விழிப்புணர்வு அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை நாமக்கல் காவல்துறை நண்பர்கள் சிறப்பாக செய்து கொடுத்தனர். பேரணியில் பங்குகொண்ட அனைவருக்கும் கடவுள் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்நிகழ்வை விதையாய் கொண்டு விருட்சமாய் வளர்ந்து வர உங்களில் ஒருவனாய் விரும்புகிறேன்.
0 Comments
Leave a Reply. |
Archives
March 2025
Donate Blood ! |