கொரோனா வைரஸ் பரவலால் உலகமே ஸ்தம்பித்து கிடந்தாலும் மருத்துவ துறை மட்டும் பலமடங்கு வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து சேவையாற்ற கூடிய நிலையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மற்றும் பிரசவ நிகழ்விற்கு இரத்தம் இன்றியமையாத ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம், இருப்பினும் ஊரடங்கு நிலையில் தன்னார்வ இரத்த கொடையாளர்கள் இரத்த்வங்கியை அணுகுவது சிக்கலான நிலையாக இருந்ததால் அரசு இரத்த வங்கியில் இருப்பு குறைந்த வண்ணம் இருந்தது, இத்தகைய இக்கட்டான நிலையில் நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மூலம் தன்னார்வ இரத்ததான முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்புற நடைபெற்ற இந்த முகாமில் நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பலரும் தன்னார்வமாக இரத்ததானம் அளித்து பல உயிர்களை காக்க உதவினர். அவர்களுக்கு நமது நாமக்கல் இரத்ததான சேவை மையம் வாயிலாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments
Leave a Reply. |
Archives
March 2025
Donate Blood ! |