வணக்கம், 01.05.2021 அன்று நமது நாமக்கல் இரத்ததான சேவை மைய இணைய தளம் (www.namakkalblooddonors.com) துவங்கி 6 ஆண்டுகள் நிறைவு பெற்று 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அதனோடு நமது துளிகள் அறக்கட்டளை (Drops Foundation) 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11 ஆம் ஆண்டில் நுழைகிறது, அதனை சிறப்பிக்கும் பொருட்டு நமது குழு வாயிலாக இரத்ததானம் அளித்து வரும் அத்தனை உயிர்காக்கும் உன்னதர்களில் ஒவ்வொரு மாதமும் 5 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பாலிசி (எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களுக்கு ஒரு லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்) பரிசாக அளிக்க உள்ளது.
தாங்கள் செய்ய வேண்டியது : 1. தாங்கள் எந்த இரத்த வங்கியில் வேண்டுமானாலும் இரத்ததானம் செய்யலாம் ( அரசு இரத்த வங்கி அல்லது தனியார் இரத்த வங்கி) 2.தாங்கள் இரத்ததானம் அளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இரத்த வங்கியில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் உங்களது பெயர், இரத்தவகை, அலைபேசி எண் ஆகியவற்றை எங்களது 9597282828 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும். 3. தாங்கள் பரிசிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்களது குழு நபர் உங்களை அழைத்து பிற விபரங்களை பெற்று கொள்வார். 4. ஒவ்வொரு மாதமும் பரிசு பெற்றோர் விபரம் மற்றும் இரத்ததானம் அளித்தோர் விபரம் நமது இரத்ததான இணையதளத்தில் பதிவேற்றப்படும். உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் . வாழ்க வளமுடன்.
0 Comments
Leave a Reply. |
Archives
March 2025
Donate Blood ! |