உலகெங்கும் வாழும் தமிழ் குடிகளின் புதிய ஆண்டு துவக்கமான சித்திரை முதல் நாளில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், திருமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி உயிர்காக்கும் ஓர் உன்னத முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.
திருமலைப்பட்டி தன்னார்வ இரத்த கொடை நண்பர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை இந்த நன்னாளில் ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தி இருந்தனர். நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி இரத்த வங்கிக்கு 26 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வின் வாயிலாக 26 உயிர்கள் காக்கப்படும் என்பது மகிழ்வான செய்தி. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற இரத்ததான முகாம்களை முன்னெடுத்து பல உயிர்களை காக்க அந்த திருமலைப்பட்டி தன்னார்வ இரத்த கொடை நண்பர்கள் உறுதி கொண்டுள்ளனர். அவர்களுக்கு நமது துளிகள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்ததான சேவை மையம் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பேரன்பு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments
அன்பிற்கினிய இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் பேரன்பு வணக்கம்,
கடந்த மார்ச் 2022 ஆம் மாத இரத்த கொடையாளர்கள் 1. திரு. மஹேந்திரன் 2. திரு. இளம்பரிதி 3. திரு. கிருஷ்ணகுமார் 4. திரு. பிரபு 5. திரு. மணிகண்டன் 6. திரு. பாலாஜி அனைத்து கொடையாளருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். |
Archives
March 2025
Donate Blood ! |