நாமக்கல் இரத்ததான சேவை மையத்தின் வாயிலான இன்றைய குருதி கொடை தனது 34வது இரத்ததானத்தினை நிறைவு செய்த திருமிகு.சாய் வித்யாதரன் மற்றும் சகோதர் திருமிகு. ராஜேஷ் அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
0 Comments
இன்றைய நவீன யுகத்தில் மருத்துவ மனைகளும் அதில் வசதிகளும் பலவாறாக பெருகிவிட்டது, எனினும், அவசர காலங்களில் வசதியற்ற மக்களுக்கு இரத்தம் எளிதாக கிடைப்பதில்லை, எனவே, இரத்தம் தேவைப்படும்போது மட்டும், தன்னார்வலர்கள் மூலம் நேரடியாக இரத்தம் வழங்கி, காலத்தினால் செய்த உதவியாய், உதிரம் கொடுத்து உயிரைக் காக்க, உருவாக்கப்பட்டதே குருதி கொடை திட்டம். இரத்ததானத்தின் தேவைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம். இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
மக்கள் பாதை குருதி கொடை திட்ட தொடர்புக்கு: ப்ரவீன் - 98400 86580
|
Archives
March 2025
Donate Blood ! |