நாமக்கல் மாவட்டம், இரெட்டிப்பட்டி ஊராட்சி, கந்தபுரி கிராமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கடவுள் அறக்கட்டளை அப்பகுதியில் நடைபெற இருந்த ஸ்ரீ சுந்தரமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்தது அதனையொட்டி, நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இரத்த வங்கி துணையோடு நடந்த இரத்ததான முகாமில் அப்பகுதியை சார்ந்த 38 இரத்த கொடையாளர்கள் தனது இரத்தத்தை தானமாக வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர், விழாவில் பெரும் சிறப்பான விஷயம் என்னவென்றால் தாமாக முன்வந்து இரத்ததானம் அளித்தவர்கள் பலரும் பெண்கள் மற்றும் ஓர் சிறப்பு செய்தவர் திரு. M. சண்முகம் அவர்கள், இவர் பார்வை குறைபாடு உள்ளவர், இவர் அளித்த இரத்ததானம் நம்மை சிலிர்ப்புக்கு உள்ளாக்கியது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற நாமக்கல் இரத்ததான சேவை மையத்தின் வாயிலாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments
|
Archives
March 2025
Donate Blood ! |