0 Comments
மனம் நெகிழவைத்த நிகழ்வு :
இன்று நான் வியாபார நிமித்தமாக எனது வாடிக்கையாளரின் வீட்டிற்க்கு சென்ற போது அவர் ( திருமதி. மலர்க்கொடி ) தன் வீட்டிற்க்கு குப்பை சேகரிக்க வரும் பெண்ணிற்க்கு வழுக்கட்டாயமாக 500 ரூபாய் பணம் கொடுக்க முயற்ச்சித்துக்கொண்டிருந்தார்.. அந்த பெண்ணோ பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்த போதும் பணத்தை கையில் திணித்துவிட்டு கவலைப்படாதே என்று கூறி அனுப்பிவைத்தார்.. அதைக்கண்ட நான் அதுபற்றி கேட்டேன். அதற்கு அவர் சொன்னது... கணவனை இழந்த அந்த பெண்ணின் இரண்டு மகன்களில் ஒரு மகன் சமீபத்தில் ஏற்ப்பட்ட ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும் அந்த சிறுவனின் 30வது நாள் ஈமச்சடங்கிற்க்காக ஏதோ தன்னால் ஆன சிறிய தொகையை கொடுத்ததாகவும் தெரிவித்தார்... அந்த பெண்ணின் பெயர் என்ன என்று அவரிடம் கேட்டதற்க்கு .. அடடா .!! தெனமும் வீட்டுக்கு வராங்க அவங்க பேர் கூட தெரியலியே என வெள்ளந்தியாக கூறி வருத்தப்பட்டார்... தான் தினமும் சந்திக்கும் , அதிக அறிமுகம் இல்லாத , பெயர் கூட தெரியாத ஒரு பெண்ணுக்காக அவர் செய்த உதவியை நினைக்கும்போது மெய்சிலிர்த்துபோனேன்.. சொந்தங்களே உதவிட யோசிக்கின்ற வேளையில்... பிறர் படும் துன்பத்தையும் தன் துன்பம் போல் எண்ணி தாமாக முன்சென்று உதவிய அந்த பெண்மணி என் பார்வையில் அன்பின் வடிவானவராக தெரிந்தார்... உதவிட நினைக்கும் மனமே உலகில் மிக உன்னதமானது.. நண்பர் மணி அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பதிவேற்றமாக இங்கு.
அருமை நண்பர் சின்னமுதலைப்பட்டி (கம்பளாய்) பகுதியில் வசிக்கும்
திரு.முத்துக்குமார் ("ஏ-நெகட்டிவ் ) அவர்கள் இன்று நாமக்கல் கோட்டை ரோடு குமரன் பாலி கிளினிக்-ல் அனுமதிக்கப்பட்டுள்ள புவனேஸ்வரி என்கிற கர்ப்பிணி பெண்ணுக்காக இரத்ததானம் செய்தார்... சரியான நேரத்தில் வந்து உதவிய அவருக்கு எங்கள் நாமக்கல் இரத்ததான சேவை மையம் சிறப்பான நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது... உதிரம் கொடுப்போம் விலைமதிப்பல்லா உயிர்களை காப்போம்.. நன்றி. |
Archives
March 2025
Donate Blood ! |