பேரன்பு வணக்கங்கள், நண்பன் அஜித்குமாரின் பிறந்த நாளான செப்டம்பர் 04, அன்று அவர் நினைவாக "இரத்த தான நிகழ்வு" ஒன்றை நமது ஊரில் ஏற்பாடு செய்திருக்கிறோம். வாழும் வரை இரத்த தானம், வாழ்ந்த பின் உடல் தானம், என்ற நண்பனின் வழியில் நாமும் தொடர்ந்திட இந்நிகழ்வு முதற் முயற்சி எனலாம். எனவே, நடக்கவிருக்கும் இந்த குருதிக் கொடை நிகழ்ச்சிக்கு நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இரு பால் மக்கள், தன்னார்வலர்கள் என அனைவரையும் ரத்த தானம் செய்திட அன்போடும், மரியாதையுடனும் அழைக்கிறோம். உங்கள் பங்கேற்ப்பை நண்பன் அஜித் மீதுள்ள அன்பாகவே எடுத்துக் கொள்கிறோம்... உங்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அழைத்திட கடமைப்பட்டுள்ளோம். நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 04, 2021 நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : பழைய பொங்கல் விளையாடு திடல், 4வது வார்டு, ராஜிவ் காந்தி நகர், நாமக்கல் இரத்த தானம் செய்வோர்களுக்கு அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும். இரத்த தானம் செய்வோம், பல உயிர் காப்போம் !!! அன்புடன், The Riders நடைபெற்ற இரத்ததான முகாமில் 43 இரத்த கொடைகள் பெறப்பட்டன., உதிரம் கொடுத்த, கொடுக்க நினைத்து வர இயலாமல் போன அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.,
0 Comments
அன்பிற்கினிய இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் பேரன்பு வணக்கம்,
கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் மாதம் இரத்த வழங்கிய 14 நபர்களில் இருந்து 5 நபர்கள் நமது மையம் வழங்கும் இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பரிசாக பெறுகின்றனர். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெறுவோர் விபரம் : க. திரு. மதன் A+ ௨. திரு. மதன் O + ௩. திரு. பூவரசன் B + ௪. திரு. மோகன்ராஜ் A+ ௫. திரு. மணிபாரதி A+ இரத்த கொடை அளித்த மற்ற அனைத்து கொடையாளருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். மகிழ்வுடன் : துளிகள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்த தான சேவை மையம். www.namakkalblooddonors.com |
Archives
March 2025
Donate Blood ! |