அன்பிற்கினிய இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் பேரன்பு வணக்கம்,
கடந்த அக்டோபர் 2021 ஆம் மாதம் இரத்த வழங்கிய நபர்களில் இருந்து 5 நபர்கள் நமது மையம் வழங்கும் இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பரிசாக பெறுகின்றனர். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இரத்த கொடை அளித்த மற்ற அனைத்து கொடையாளருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
0 Comments
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் அன்புமலா் கலந்துகொண்டாா். அவா் மாணவா்களிடையே ரத்த தானத்தின் தகுதிகள், அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். வளையப்பட்டி சுகாதார ஆய்வாளா் பழனிசாமி, மோகனூா் சுகாதார மேற்பாா்வையாளா் செல்வராஜ் ஆகியோா் மாணவா்களின் உடல் தகுதிகளைப் பரிசோதித்தனா். இதில் 40 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் சந்திரசேகரன், நாட்டுநலப் பணி திட்ட அலுவலா்கள் நாகரத்தினம், பழனிசாமி ஆகியோா் செய்திருந்தனா். |
Archives
March 2025
Donate Blood ! |